இந்திய பாகிஸ்தான் எல்லையில், பாலங்கள் இல்லாத பகுதிகளில், ஆறு மற்றும் சிறிய ஓடைகளை பீரங்கிகள் மற்றும் ராணுவத் தளவாடங்களை எளிதில் நகர்த்துவதற்கு இந்த குறுகிய பாலங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 10 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் 70 டன் வரையுள்ள எடையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் தற்காலிக பாலங்களை விட அதிக வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும், எத்தகைய நீர்சூழலிலும் பயன்படுத்தும் வகையிலும் இந்த பாலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.