இனி இது நடந்தால் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.! கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.! 

இனி இது நடந்தால் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.! கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.! 

இந்தியாவில் விரைவான சாலை வழிபோக்குவரத்துக்காக 4 வழி மற்றும் 6 வழி சாலைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த சாலைகளில் வாகனங்கள் பயணிக்க கட்டணமாக சுங்கசாவடிகள் தொடங்கப்பட்டு ஓட்டுநர்களிடமிருந்து வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த சுங்கச்சாவடிகளால் பயணம் செய்ய அதிகம் நேரமாவதாக குற்றம் சாட்டப்பட்டு அதற்கு பதில் ஃபாஸ்ட் டேக் முறை கொண்டுவரப்பட்டது.

இந்த ஃபாஸ்ட் டேக் முறையிலும் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு இதன் காரணமாக வாகனங்கள் அதிக நேரம் சுங்கசாவடிகளில் காத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இனி சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர்களுக்கு மேல் வாகனங்கள் நின்றால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வாங்காமல் இலவசமாக வாகனங்களை செல்லவேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாட்டில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறையஅனைத்து வாகனங்களுமே ஃபாஸ்ட் டேக்கை பொருத்தியுள்ளன. இதனால் சுங்கச் சாவடிகளில் காகிதமில்லா பணப்பரிவர்த்தனை உயர்ந்திருக்கிறது. அதேநேரத்தில், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் நன்கு பலனடைந் துள்ளனர்.

இதனால் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப் படவுள்ளன. அதன்படி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவை குறிக்கும் வகையில் மஞ்சள் நிறக் கோடு வரையப்படும். இக்கோட்டினை தாண்டியும் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே சுங்கச்சாவடிகளை விட்டு வெளியேறலாம்" என அந்த அறிக்கையில் கூறியிருக்கிறது.