கொஞ்ச பேருக்கு தடுப்பூசி போடுங்க..ரொம்ப நாள் வரும்,.காலியாகாது,.. தடுப்பூசி பற்றாக்குறையை போக்க பாஜக முதல்வரின் அடடே யோசனை.! 

கொஞ்ச பேருக்கு  தடுப்பூசி போடுங்க..ரொம்ப நாள் வரும்,.காலியாகாது,.. தடுப்பூசி பற்றாக்குறையை போக்க பாஜக முதல்வரின் அடடே யோசனை.! 

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையில், கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலை இருக்கிறது. ஆனால் இந்தியா கடுமையான தடுப்பூசி பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது. மாநில அரசுகளுக்கு குறைந்த அளவே தடுப்பூசி கொடுப்பதால் அதிக தடுப்பூசி வேண்டும் என மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கின்றன.

இதை முன்வைத்தே "டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், எங்களிடம் தடுப்பூசி இல்லை. உடனே ஒன்றிய அரசு தடுப்பூசிகளை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார்.  

இந்நிலையில் இதற்கு பதிலளித்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் "டெல்லி அரசு நாள்தோறும் 2 லட்சம் மக்களுக்கு தடுப்பூசிகளை விரைவாக செலுத்தியதால் அங்கு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஹரியானாவில் 50 முதல் 60 ஆயிரம் வரையே தடுப்பூசி செலுத்துகிறோம். அதனால், எங்களுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது" எனக் கூறியுள்ளார்.