கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் எரியூட்டப்பட்ட ஹிந்துவின் சடலம்.! -கேரள முதல்வர் பாராட்டு.!  

கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் எரியூட்டப்பட்ட ஹிந்துவின் சடலம்.! -கேரள முதல்வர் பாராட்டு.!  

கேரளத்தை சேர்ந்தவர் 86 வயதான கே.ஸ்ரீநிவாஸ். இவர் கொரோனாவால் மரணமடைந்தார். இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர்.மேலும் இவர் இருந்த இடத்தில் பொது தகன மேடை இல்லாததால் இவரது உடலை எங்கு எரியூட்டுவது என அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியவில்லை.

இதனால் இவரது உடலை எரிக்க அருகிலிருந்த கிறிஸ்தவ கல்லறையில் எரிக்கலாம் என முடிவெடுத்து அந்த கல்லறைக்கு சொந்தமான சர்ச் பாதிரியாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கை கேட்ட சர்ச் பாதிரியாரும் இதற்கு அனுமதி கொடுப்பது என் கடமையும், பொறுப்புமாகும் எனக் கூறி கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் ஸ்ரீநிவாஸின் சடலத்தை எரிக்க அனுமதி கொடுத்துள்ளார்.

அதன் பின் அங்கு ஸ்ரீநிவாஸின் சடலம் எறிவூட்டப்பட்டது. இந்த சம்பவத்தை அந்த கிராம மக்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட இந்த சம்பவம் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கவனித்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து முதல்வர் பினராயி விஜயன்  'செயிண்ட் ஜார்ஜ் தேவாயலத்தின் இந்த சிறப்பான செயல், அதாவது ஒரு இந்துவின் உடலை கல்லறையில் எரிக்க அனுமதித்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது' எனக் கூறியுள்ளார்.