மதுவிற்பனையில் மட்டும் 17,600 கோடியா? சைலண்ட்டாக அதகளம் பண்ணும் ஜெகன்மோகன் ரெட்டி...

மதுவிற்பனையில் மட்டும் 17,600 கோடியா? சைலண்ட்டாக அதகளம் பண்ணும் ஜெகன்மோகன் ரெட்டி...

ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராகவுள்ள ஆந்திராவில் மதுவிற்பனையில் மட்டும் 17,600 கோடி சம்பாதித்துள்ளது.

 

2019ம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அதிரடியான முடிவுகளை எடுத்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

தேர்தலுக்கு முன்பாக ஆந்திராவில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றதால், ஆந்திராவில் ஒரு ஆண்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என முதல்வர் அறிவித்தார்.

எனினும் அவர் முதல்வராக பொறுப்பேற்ற சிறிது நாட்களில் அதுவரை தனியார் நடத்தி வந்த மதுவிற்பனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தார். தொடர்ந்து, 4380 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கையை 2934-ஆக குறைத்தார். எனினும் பூரண மதுவிலக்கை அவர் இதுவரை அமல்படுத்தவில்லை.

இந்த நிலையில், கடந்த 2020 - 21 நிதியாண்டில் மதுவிற்பனை மூலம் 17,600 கோடி ரூபாயை ஆந்திர அரசு வருமானமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களின் விலையை இரண்டு ஆண்டுகளில் 125% வரை ஆந்திர அரசு உயர்த்தியதால் மது விற்பனை விலை உயர்ந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.