இன்னும் மூன்று நாட்களில் நான் கைது செய்யப்படலாம்: மணிஷ் சிசோடியா!

இன்னும் மூன்று நாட்களில் நான் கைது செய்யப்படலாம்: மணிஷ் சிசோடியா!

டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைத் தடுக்கும் சதியின் ஒரு பகுதியாக தானும் கைது செய்யப்படலாம் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடிக்கும், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும். அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறையும் என்னைக் கைது செய்யும். நாங்கள் பயப்பட மாட்டோம், உங்களால் எங்களை உடைக்க முடியாது. அவர்களுடைய பிரச்சினை அரவிந்த் கெஜ்ரிவால்.எனக்கு எதிரான முழு நடவடிக்கைகளும், என் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனைகளும், அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்பாடுகளைத் தடுக்கவே,நான் எந்த ஊழலும் செய்யவில்லை. நான் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி அமைச்சர் என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 19 அன்று தனது இல்லத்தில் நடந்த சோதனை குறித்து பேசிய சிசோடியா, தனது குடும்பத்தினருக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாத சிபிஐ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். "சிபிஐ அதிகாரிகள் நேற்று எனது இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் துணை முதலமைச்சரின் கல்வி அமைச்சின் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

"அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் நேற்று டெல்லியின் கல்வி மாதிரியை அதன் முதல் பக்கத்தில் வெளியிட்டது. இது இந்தியாவுக்கே பெருமை” என மணிஷ் சிசோடியா கூறினார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி இதை ஒரு கட்டணச் செய்தி எனக் கூறியுள்ளது. அந்த நாளிதழுக்கு கட்டணம் செலுத்தி போடப்பட்ட செய்தி இது என்பதே பாஜகவின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

டெல்லி துணை முதல்வரின் வீட்டில் நடந்த சோதனையைத் தவிர, டெல்லி கலால் கொள்கை தொடர்பாக ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 30 இடங்களில் சிபிஐ ஆகஸ்ட் 19 அன்று சோதனை நடத்தியது.