’சில்வண்டு சிக்கும் சிறுத்த சிக்காது’ சிறுத்தையை பிடிக்க திணறும் அதிகாரிகள்...!

’சில்வண்டு சிக்கும் சிறுத்த சிக்காது’ சிறுத்தையை பிடிக்க திணறும் அதிகாரிகள்...!

Published on

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணை சுற்றுவட்டாரத்தில் சிறுத்தை நடமாட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இதையடுத்து கே.ஆர்.எஸ் அணை மற்றும் பிருந்தாவன் கார்டன் பூங்கா பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அணையின் சுற்றுவட்டாரத்தில் சுமார் பத்து இடங்களில் அதிகாரிகள் பொறி வைத்து முகாமிட்டுள்ள சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். 

ஆட்டுக்கறி, ஆட்டு எலும்பு மற்றும் நாய்களையும் பொறியில் கட்டி  வைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இரண்டு வாரமாக எந்த பொறியிலும் சிறுத்தை சிக்காமல் அதே பகுதியில் சுற்றி வருவது சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. நேற்று இரவு இதே சிறுத்தை பிருந்தாவன் பூங்காவின் வடக்கு பகுதியில் உள்ள சாலையில் முள்ளம்பன்றி ஒன்றுடன் ஒய்யாரமாக சாலையில் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சி அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாக அணைப்பகுதியின் சுற்று வட்டாரத்தில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com