எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம்... ராகுல் பங்கேற்பு...

டெல்லியில் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குழு கூட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம்... ராகுல் பங்கேற்பு...
Published on
Updated on
1 min read
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 23 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் நாடாளுமன்றம் முடக்கப்படுவது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் எப்படியாவது மசோதாக்களை தாக்கல் செய்துவிட பாஜக திட்டமிட்டுள்ளது. 
இந்நிலையில் இனி வரும் நாட்களில் அவையில் எவ்வாறு நடந்துக் கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பதற்கான நாடாளுமன்ற குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com