தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை...

சிதிலமடைந்துள்ள மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை மீட்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை...
Published on
Updated on
2 min read

மதுரை | கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் ஒவ்வொரு மாசி மாதமும் பிரம்மாண்டமான திருவிழா என்பது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்கான வயது பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து இருக்கிறது என்று பெருமிதத்தோடு மூத்த குடிமக்கள் சொல்லி வருகிறார்கள்.

மதுரை கூடலழகர் பெருமாள் இந்த தெப்பகுளத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த  தெப்பக்குளத்தில் பதினாறு திருவிழாக்கள் மாசி மாதத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெறுவது உண்டு.

ஆனால் கடந்த பல வருடங்களாக இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் என்பதே இல்லாமல் வற்றி பொய் இருந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் இன்றி சமூக விரோதிகள் இரவு நேரத்தில்அனைத்து விதமான சமூக விரோத செயல்களும் நடைபெறும் நடைபெறும் கூடாரமாக மாறிப் போய்விட்டது என பொதுமக்கள் வேதனையும் தெரிவிக்கின்றனர்.

ஒரு காலகட்டத்தில் இந்த தெப்பக்குளத்திற்கு கிருமால் நதி மற்றும் வைகை துணை கால்வாய்கள் தண்ணீரும்   கொண்டுவரப்பட்டு தெப்பக்குளம் முழுமையாக நிரப்பப்படும். ஆனால் 1920 ஆம் ஆண்டு ரயில்வே பணி என்பது ஆரம்பிக்கப்பட்டதால் இங்கே தண்ணீர் வருவதற்கான வழிகள் முழுவதும் அடைக்கப்பட்டு சிகிலமடைந்து விட்டது.

கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு மேலாக இந்தக் குளம் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பது பக்தர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலைதான் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கும் இருந்து வந்தது ஆனால் தற்சமயம் அங்கே தண்ணீர் முழுவதுமாக நிரப்பப்பட்டு படகு சவாரி போன்றவை நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக தண்ணீர் நிரப்பப்படமால இருந்தாலும் திருவிழாக்களும் தடைபெற்று வருகிறது. அதேபோல இந்த தெப்பக்குளத்தில் இந்த பகுதியில் உள்ள ஆயிரம் கணக்கான அடுக்குமாடிகளின் கழிவு நீர் வந்து செல்வது மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாநகராட்சியே இந்த கழிவு நீர் வரும் பாதைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தண்ணீர் இல்லாத காரணத்தினால் தற்சமயம் தேர் தெப்பத்திற்குள் நிலை தெப்பமாக சுற்றி வருகிறது.

1920 ஆம் ஆண்டு ரயில்வே பணி ஏற்பட்ட பொழுது உங்கள் தெப்பத்திற்கு வரும் தண்ணீர் பாதை அடைக்கப்பட்டு விட்டது நீங்கள் கடிதத்தின் மூலமாக எங்களிடம் கோரிக்கை வைத்தால் அதை சரி செய்ய தயார் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனாலும் கோயில் நிர்வாகம் இதுவரை எந்தவித ஒத்துழைப்பும் தராத காரணத்தினால் தண்ணீர் இதுவரை வரவில்லை வர முடியாத ஒரு சூழ்நிலை என்பது இருந்து வருகிறது. இந்த தெப்பத்தை சுற்றிலும் கோயிலின் சார்பாக 108 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது

இந்த கோயிலை சுற்றி இருக்கக்கூடிய கடைகளை காலி செய்ய வேண்டும் என அறநிலைத்துறையின் சார்பாக நோட்டீஸ் என்பது வழங்கப்பட்டது நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது பின்பு நீதி அரசர்கள் மாற்று இடத்தை கொடுத்து விட்டு இந்த இடத்தை காலி செய்யச் சொல்லி நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருக்கிறது.

தற்சமயம் இங்கே இருக்கக்கூடிய கடைக்காரர்களும் தெப்பக்குளத்தின் புனிதத்தை காப்பற்ற நாங்கள் தயார் மாற்று இடத்தை எங்களுக்கு ஒதுக்கி தரும் பட்சத்தில் நாங்கள் காலி செய்கிறோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com