ஆக்கிரமிப்புகள் அகற்றம்…தடுத்த சட்டமன்ற உறுப்பினர் கைது!  

ஆக்கிரமிப்புகள் அகற்றம்…தடுத்த சட்டமன்ற உறுப்பினர் கைது!   

புதுச்சேரி மாநிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்த வீடுகளை ரயில்வே போலீசாருடன் இணைந்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட இடம்

புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ளது ராசு உடையார்தோட்டம் இது ரயில்வேவுக்கு சொந்தமான இடம் இடத்தில் 40 ஆண்டுகளாக குடியிருந்தவர்களை வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பு ஒதுக்கி தருவதாக அரசு உத்தரவாதம் கொடுத்து இருந்ததாக கூறப்படுகின்றது.

சட்டமன்ற உறுப்பினர் போராட்டம்

இந்நிலையில் இன்று காலை முதல் ரயில்வே போலீசார் முன்னிலையில் ரயில்வே இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது சம்பவம் அறிந்து அப்பகுதி சென்ற அத்தொகுதியின் திமுக சட்டமன்ற கென்னடி  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ உட்பட 50 பேரை போலீசார் கைது செய்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விடுவித்தனர்.

சாலை மறியல்

இதனைத்தொடர்ந்தும் பொது மக்கள் அண்ணா சிலை அருகே மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான சிவா உள்ளிட்ட திமும எம்.எல்.ஏக்கள் காவல் நிலையத்திற்கு வந்து காவல் துறை அதிகாரிகள்.மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தை உடனடியாக வழங்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்தனர்.