காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு தேர்தல் வியூக பணியில் இருந்து விலக உள்ளதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்திருந்தார். அவர் வெளியேறினாலும் அரசியல் கட்சி தலைவர்கள் அவரை விடுவதாக இல்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், பிரசாந்த் கிஷோரை இருமுறை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மாநில சட்டமன்ற தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கு ஆலோசனை வழங்க பிரசாந்த் கிஷோர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று டெல்லியில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சோனியா , ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை, பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியிருந்தார். 2024ஆம் ஆண்டு  மக்களவை தேர்தல் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.