கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் ஹவாலா முறைகேடு நடந்ததாக கடந்த 2018ம் ஆண்டு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான 4.81 கோடி ரூபாய் சொத்துக்களும் முடக்கப்பட்டன.
இந்தநிலையில் நேற்று மீண்டும் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்து அழைத்து சென்றது. இதனையடுத்து அமைச்சர் கைதினை வரவேற்றுள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார், கைது நடவடிக்கையை அமலாக்கத்துறை காலதாமதமாக மேற்கொண்டுள்ளதாகவும், அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விரைந்து நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.