கோழிக்கோடு அருகே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 190 பயணிகளுடன் தரையிறங்க முயன்ற விமானம், விழுந்து நொறுங்கியதில் 19 பயணிகள் மற்றும் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
மோசமான வானிலை காரணமாக விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது தொடர்பாக 257 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் விமானியின் கவனக்குறைவு மற்றும் ஏற்கனவே இதுபோன்ற சூழலை எதிர்கொண்ட அனுபவ நம்பிக்கை ஆகியவையே காரணம் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் விமானத்தை தரையிறக்காமல் வானில் வட்டமிட அறிவுறுத்தியும், அவர் உத்தரவை மீறி விமானத்தை தரையிறக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.