உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும் தான்! அதுக்காக இப்படியா? வைரல் வீடியோ!!!

10 கி.மீ வரை, திருடனை தொங்க வீடுக் கூட்டி வந்து போலீசாரிடம் ஒப்படைத்த ரயில் பயணிகள் வீடியோ தற்போடு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும் தான்! அதுக்காக இப்படியா? வைரல் வீடியோ!!!
Published on
Updated on
1 min read

திருடன் என்றால் யாருக்கு தான் பிடிக்கும்? கஷ்டப்பட்டு நாம் சம்பாதிப்பவற்றை, ஒற்றை நொடியில், தந்திரமாக பறித்து செல்லும் கயவர்களுக்குக் கண்டிப்பாக தண்டனை கொடுத்து தான் ஆக வேண்டும். அந்த குற்றத்தை அவர்கள் மீண்டும் நினைத்துக் கூடப் பார்க்காத வகையில், அந்த தண்டனை அமைய வேண்டும் என்று நாம் அனைவருமே நினைத்திருப்போம்.

ஆனால், உண்மையில் நாம் அவர்களை காவலர்களிடம் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தான் வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில், இங்கு பீகாரில், சிலர் சட்டத்தை சில நேரம் தங்கள் கைகளில் எடுத்துள்ளனர். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பல கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 15ம் தேதி, பீகாரைச் சேர்ந்த ஒருவர், ரயில் பயணிகளின் சட்டைப் பையில் இருந்து, ரயில் நிலையத்தை விட்டு கிளம்பும் நேரம் திருட் முயற்சி செய்திருக்கிறார். அதனைக் கவனித்த பயணிகள், அவரது கையை அப்படியே இழுத்துப் பிடித்துள்ளனர்.

ரயில் நிற்காமல் செல்லத் தொடங்கிய நிலையில், சுமார் 10 கி.மீ வரை ரயிலில் பயணம் செய்துள்ளனர். செல்லும் வழியெல்லாம், கைகள் வலி கடுக்க, தொங்கியபடியே வந்த அந்த திருடன், மண்ணிப்பு கேட்டு கெஞ்சி அழுதுக் கொண்டே இருந்திருக்கிறார். அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட பயணிகள், அதனை வைரலாக்கியுள்ளனர்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ‘உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்’ என்றும், சரியான தண்டனை, அவருக்கு இன்னுமும் வேண்டும் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் இதனை ஆமோதித்தாலும், ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வயிற்று பசிக்கு திருடுபவனை இவ்வளவு மோசமாக நடத்தும் அவர்கள் தான் மிருகங்கள் என்றும், திருடன் செய்தது தவறு தான்; ஆனால், அதற்காக இவ்வளவு மோசமான தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் கமெண்ட் செய்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால், சோசியல் மீடியாக்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com