ஒரே ஆண்டில் 30 மாடுகளை கொன்ற புலி,..கடும் அச்சத்தில் பொதுமக்கள்.! 

கேரளா மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வருடத்தில் 30 மாடுகளை புலி தாக்கி கொன்றுள்ளதால் மாடு வளர்போர் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள். 

ஒரே ஆண்டில் 30 மாடுகளை கொன்ற புலி,..கடும் அச்சத்தில் பொதுமக்கள்.! 

கேரளா மாநிலம் மூணாறு தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களின் வருமானத்திற்காக வீடுகளில் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த மாட்டு வளர்ப்பின் மூலம் கிடைக்கும் பால் விற்பனை செய்து தங்களின் குழந்தைகளின் கல்வி செலவு மற்றும் குடும்ப செலவிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக இங்குள்ள மாடுகளை புலி தொடர்ந்து தாக்கி கொன்று வருகிறது.இந்த ஒரு வருடத்தில் மட்டும் புலி சுமார் 30  மாடுகளை தாக்கி கொன்றுள்ளது.இதனால் மூணாறு தேயிலை தோட்டப்பகுதியில் தங்களின்  கால்நடைகளை காப்பாற்ற முடியாமல் போகும் நிலையில் உள்ளது.புலி தாக்கி கொன்ற பசுக்களுக்கான அரசு இழப்பீட்டு  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  இந்த புலியை பிடித்து வேறு இடத்தில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாடு வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று லோகாட் தோட்டத்தைச் சேர்ந்த காளியம்மாவின் மூன்று மாடுகளை புலி தாக்கி கொன்றுள்ளது. இந்த பகுதியில் உள்ள மாடுகளிலிருந்து கிடைக்கும் பால் மூணாரை  தலைமையிடமாகக் கொண்டு லட்சுமி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு விற்கப்படுகிறது. புலி தாக்குதலால் கடந்த சில ஆண்டுகளாக பால் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக சங்கத்தின் தலைவர் குருசாமி தெரிவித்தார்.  

பசுக்களை புலி தாக்கி கொல்வதால்  பால் சேமிப்பிலும் குறிப்பிடத்தக்க அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில்  தற்பொழுது  4500 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. 1100 லிட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது புலி அச்சறுத்தல் பலர் மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர் என்பதே. எனவே இந்த பகுதியில்  கால்நடைகளை  பாதுகாக்க அரசு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் சமீபத்தில் மாடுகளை வேட்டையாடும் புலியின் புகைப்படத்தை வனத்துறையினர் ரகசிய கேமரா மூலம் பதிவு செய்துள்ளனர். புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர் மிக விரைவில் புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.