வாகனத்தை இடித்ததால் ஆரம்பித்த பிரச்னை: பழங்குடியினத்தவரை துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது  

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தவரை துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் கண்ஹையா லால் பில் என்கிற பழங்குடி இளைஞர், வேறு சிலரோடு தன் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற மற்றொரு சமூகத்தினரின் வாகனத்தில் இடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கண்ஹையாவை அடித்து துன்புறுத்தினார். அத்துடன்  தமது உறவினர்களுடன் சேர்ந்து பழங்குடியினத்தவரின் கால்களை லாரிகளில் கட்டி இழுத்துச் சென்ற  காட்சி காண்போரை அதிர்ச்சியடைய செய்தது..இதில் பலத்த காயமடைந்த கண்ஹையா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 8 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறும் போலீசார், தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவித்தனர். சாதிய வன்கொடுமை காரணமாக பழங்குடியினத்தவர் கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.