ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை.! பரபரப்பை ஏற்படுத்திய ட்வீட்.! 

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை.! பரபரப்பை ஏற்படுத்திய ட்வீட்.! 

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நாடு முழுவதும் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவது உண்மை தான் என தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

இதனை சுட்டிக்காட்டி முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன் 2ஆம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள்தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம். 'தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது' என்று நாள் தோறும் மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.