தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு ரத்த உறைவா? அதற்கு இதுதான் காரணமா?

தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு ரத்த உறைவா? அதற்கு இதுதான் காரணமா?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் சிலருக்கு இரத்த உறைதல் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரிட்டனின் ஆஸ்ட்ராஜெனிகா மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட சிலருக்கு இரத்த உறைதல் பாதிப்பு ஏற்பட்டது. இரத்த உறைதல் பாதிப்பால் வெகு சிலர் உயிரிழந்த நிலையில் தடுப்பூசியின் மீது மக்களுக்கு  ஒரு வித அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறியும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர். அதன்படி ஜெர்மனியில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அதற்கான விடை கிடைத்துள்ளது.

தடுப்பூசியில் உள்ள  அடினோவைரஸ்கள் தான் இரத்த உறைதல் பாதிப்புகளுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிதுள்ளனர். எனவே தடுப்பூசிகளில் அதன் புரதத்தின் வரிசையை மாற்றியமைக்கவும் தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.