உங்க விதிமுறைக்கு கட்டுப்பட்டா தனிஉரிமை பாதுகாப்பு எப்படி? மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்த வாட்ஸ்அப்!!

உங்க விதிமுறைக்கு கட்டுப்பட்டா தனிஉரிமை பாதுகாப்பு எப்படி?  மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்த வாட்ஸ்அப்!!

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்களுக்கு விதித்துள்ளது.

இதனை ஏற்றுக் கொள்ள சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு 3 மாத அவகாசம் வழங்கிய நிலையில் அவகாசமானது நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்குவதால், பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பை உடைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

மேலும் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் பொருட்டு தொடங்கப்பட்ட இச்சேவையை மீறும் வகையிலான மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு எதிராக வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.