கோவாக்‌ஷின் பெஸ்டா? கோவிஷீல்டு பெஸ்டா?

கோவாக்‌ஷின் பெஸ்டா? கோவிஷீல்டு பெஸ்டா?

கோவாக்சின் தடுப்பூசியை காட்டிலும் கோவிஷீல்ட் அதிகமான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவிஷீல்ட் இங்கிலாந்தின் ஆஸ்போர்ட் - ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கோவக்சின் மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தால் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

இந்தநிலையில் இவ்விரு தடுப்பூசிகளின் செயல்பாடுகள் குறித்த முன்னேட்ட ஆய்வு ஆன்டிபாடி டைட்ரே என்ற அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. அதில் கோவாக்சினுடன் ஒப்பிடும்போது கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெறுபவர்களின் உடலில் ஆன்டிபாடிக்கான விகிதங்கள் அதிகமாக காணப்படுவது தெரியவந்துள்ளது. 

அதாவது கோவாக்சின் தடுப்பூசியை காட்டிலும் கோவிஷீல்டு, கொரோனா-வை எதிர்க்க கூடிய ஆன்டிபாடிகளை அதிக அளவு உற்பத்தி செய்வதாக கூறப்படுகிறது. சுமார் 325 ஆண்கள், 227 பெண்கள் என 552 நபர்களிடம் இந்த ஆய்வாக மேற்கொள்ளப்பட்டது. இதில் 456 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 96 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்.

இதில் கோவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களில் 86.8 சதவீதம் ஆன்டிபாடிக்கான விகிதங்கள் தென்படுவதாகவும் அதுவே கோவாக்சின் தடுப்பூசியில் 43.8 சதவீதம் ஆன்டிபாடிக்கான விகிதங்கள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.