பாடத்திட்டத்தில் இடம்பெற்ற யோகி, ராம்தேவ் எழுதிய புத்தகங்கள்.! இதை படித்தால் மட்டுமே தேர்ச்சி.! 

பாடத்திட்டத்தில் இடம்பெற்ற யோகி, ராம்தேவ் எழுதிய புத்தகங்கள்.! இதை படித்தால் மட்டுமே தேர்ச்சி.! 

ஒன்றிய ஆட்சியை பாஜக அரசு கைப்பற்றியதும் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் அவர்களது கருத்துக்களை திணிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச பல்கலைக்கழகத்தில் முதல்வர் யோகி மற்றும் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

பாஜகவின் உத்தரபிரதேசத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் யோகா மூலம் நோய்களை குணப்படுத்துவது தொடர்பாக 'ஹத்யோகா கா ஸ்வரப் வா சாதனா' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் முதல்வராகும் முன் கோரக்பூர் மடாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பிரபல யோகா குருவும், பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பாபா ராம்தேவ் 'யோக் சாதனா வா யோக் சிகிஸ்டா ரகஷ்யா' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  

இந்த இரண்டு புத்தகங்களும் உத்தரபிரதேச மாநில அரசால் இயங்கும் சந்த்ஹரி ஷாரான் சிங் பல்கலைகழகத்தில் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.இளநிலை தத்துவவியல் (philosophy) பாடங்களில் இந்த புத்தகங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. தத்துவவியல் பயிலும் மாணவர்கள் கட்டாயமாக யோகி ஆதித்யநாத் மற்றும் ராம் தேவ் எழுதிய புத்தகங்களை படிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.