பக்ரீத்திற்கு தளர்வு அறிவித்த கேரள அரசு... உச்சநீதிமன்றத்தில் விசாரணை...

கேரளாவில் பக்ரீத்தை முன்னிட்டு 3 நாட்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றம் முன் விசாரணைக்கு வருகிறது.

பக்ரீத்திற்கு தளர்வு அறிவித்த கேரள அரசு... உச்சநீதிமன்றத்தில் விசாரணை...
கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கேரளா, மகராஷ்டிரா மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனிடையே கேரளாவில் புதிதாக ஜிகா வைரஸும் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால் பக்ரீத்தை முன்னிட்டு அங்கு கடைபிடிக்கப் பட்டு வந்த ஊரடங்கில் 3 நாட்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்தநிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கேரளா அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் காலவரையற்ற ஊரடங்கினை நெடுநாட்கள் நீட்டிக்க முடியாது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கானது விசாரணைக்கு வரும் நிலையில், பக்ரீத்தை முன்னிட்டு இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.