வார விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் .
இந்த நிலையில் வார விடுமுறை தொடர்ந்து கொடைக்கானலுக்கு தமிழகம் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர் .
பிரதான சுற்றுலா தளங்களான மோயர் சதுக்கம், பைன் மர காடுகள், குணா குகை, நட்சத்திர ஏரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் வெயில் ஒரு பகுதியிலும் மற்றொரு பகுதியில் குளிரும் மாறி மாறி காலநிலை இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .
சுற்றுலா பயணிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.