புதுச்சேரியில் 15 ஏக்கர் தரிசு நிலம் நகர்ப்புற காடாக மாற்றம்!!

புதுச்சேரியில் 15 ஏக்கர் பரப்பளவிலான தரிசு நிலத்தை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், நகர்ப்புற காடாக மாற்றியுள்ளார்.

புதுச்சேரியில் 15 ஏக்கர் தரிசு நிலம் நகர்ப்புற காடாக மாற்றம்!!

புதுச்சேரியில் கடந்த 5 வருட தொடர் முயற்சியால் 15 ஏக்கர் பரப்பளவிலான தரிசு நிலம் நகர்ப்புற காடாக மாற்றப்பட்டுள்ளது. இதனை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தனது முயற்சியினால் மாற்றி அசத்தியுள்ளார்.

இது குறித்து கூறும் அவர், அங்கு 5 ஆயிரம் மரங்கள் கொண்ட நகர்ப்புற காடு உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,  இங்கு 20 முதல் 25 வகையான பறவைகள் வந்து செல்வதாகவும் கூறினார்.

தற்போது கோடை காலம் என்பதால் பறவைகளுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதை உறுதி செய்வதாகவும்,அதிக பறவைகளை ஈர்க்கும் வண்ணம்  சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.