இந்தியாவில் 40 கோடி பேருக்கு கொரோனா அச்சுறுத்தல் உள்ளது: ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்...

நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு, கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் உருவாகவில்லை என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில்  40 கோடி பேருக்கு கொரோனா அச்சுறுத்தல் உள்ளது: ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்...
நாட்டு மக்களிடம் கொரோனா தொற்றுக்கு எதிரான ஆண்டிபாடிகள் என்று சொல்லக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதா? என நான்காவது கட்டமாக  ஐ.சி. எம்.ஆர். ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுப் பேசிய, ஐ.சி. எம்.ஆர். தலைவர் பல்ராம் பார்கவா, ஜூன்  மற்றும் ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் 70 மாவட்டங்களில், 6 முதல் 17 வயதுக்குட்பட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த ஆய்வு முடிவின் படி, குறிப்பிட்ட அந்த வயதினரில் 67 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல், 7 ஆயிரத்து 252 சுகாதார ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் படி, மூன்றில் இரண்டு பங்கினருக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறினார். எனவே, இன்னும் 40 கோடி பேருக்கு, கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.