ஹிஜாப் சர்ச்சையில் தேசிய கொடியை இறக்கி காவி கொடி ஏற்றிய இந்து மாணவர்!!

ஹிஜாப் சர்ச்சையில் தேசிய கொடியை இறக்கி காவி கொடி ஏற்றிய இந்து மாணவர்!!

இந்து மாணவர் ஒருவர் கல்லூர் கொடி கம்பத்தில் இருந்த தேசிய கொடியை இறக்கிவிட்டு, காவி கொடியை ஏற்றியதாக கூறி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில், கடந்த சில நாட்களாகவே இஸ்லாமியர்கள் பர்தா அணிவதை எதிர்த்து, கல்லூரி மாணவர்கள் அனைவரும் காவி உடை அணியும் விவகாரம் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. படிக்கும் வயதிலேயே மணவர்களிடையே மதம் என்ற நஞ்சை விதைத்து அவர்களிடம் பிரிவினை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிவமொக்கா டவுன் பி.எச். சாலையில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரியிலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த பெண்ணை எதிர்த்து  சக இந்து மாணவர்கள் ஒன்றினைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷங்களை எழுப்பிக்கொண்டு வந்தனர். ஆனால் அந்த பெண் அவர்களை தைரியமாக எதிர்த்து அல்லாஹூ அக்பர் என்று கூறி போராடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

அந்த வகையில் தற்போது கல்லூரி மாணவர்களிடையே  இடையே ஏற்பட்ட மோதலில் இந்து மாணவர் ஒருவர், கல்லூரியில் உள்ள கொடி கம்பத்தில் ஏறி, அதில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடியை அவிழ்த்து அதற்கு பதிலாக காவி கொடியை கட்டியுள்ளார். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவியுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் தடியடி நடத்தி விரட்டி விட்டு, உடனடியாக காவி கொடியை அகற்றி மீண்டும் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பேசிய சிவமொக்கா எஸ்பி பிஎம் லக்ஷ்மி பிரசாத், மாணவர்கள் “தேசிய கொடியை இறக்கிவிட்டு காவி கொடி ஏற்றவில்லை என்றும், அந்த கம்பத்தில் முதலில் தேசியக் கொடியே இல்லை என்றும், வெறுமென இருந்த கம்பத்தில்தான் காவி கொடி ஏற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படி படிக்கும் வயதில் கல்வியை போதிக்காமல் இப்படி மத வெறியை போதித்து அவர்களிடையே இருந்த ஒற்றுமையை சீர்குலைத்து மோதலை தூண்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.