ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் மீது அதிரடி படை தாக்குதல் - காணொளி வைரல் ஆனதால் சர்ச்சை!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் மீது அதிரடி படை தாக்குதல் - காணொளி வைரல் ஆனதால் சர்ச்சை!

இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில்  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அதிரடி படையினர் மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொளி ஒன்று வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்  போது காவல் துறையினர் மற்றும் அதிரடி படையினர் மிக மோசமான முறையில் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சிறார்கள்  உட்பட பலர் கடுமையான காயம் அடைந்தனர். மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் நேற்று கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், மாணவர்களுக்காக மக்கள் கொண்டு வந்த உணவுகள் மீது நீர்த்தாரை வீசப்பட்டது.

இதனிடையே நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மீதும்  கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதற்காக காவல் துறையினர் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.