பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்- குழந்தையை மீட்ட போலீஸ்....

ஆந்திரா மாநிலம் அருகே அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தையை திருடி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்- குழந்தையை மீட்ட போலீஸ்....

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அருகே உள்ள மசூலிபட்ணம் அரசு மருத்துவமனையில்  கடந்த வாரம் இந்துஜா (29) என்ற பெண் பிரசவத்துக்காக  சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த நிலையில் நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இந்துஜாவிடம் வந்து நான் உண் கணவரின் உறவினர் என கூறி அறிமுகம் செய்து  கொண்டார்.

மாலை வரை மருத்துவமனை வளாகத்தில் அந்த பெண் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்துஜா ஊசி போட்டு கொள்வதற்காக குழந்தையை அந்த  பெண்ணிடம் கொடுத்து சென்றுள்ளார். அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார். ஊசி போட்டுவிட்டு திரும்பி வந்து பார்த்த இந்துஜா குழந்தையுடம் அந்த பெண் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார், தனிப்படை அமைத்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை தேடி வந்தனர். இதற்கிடையில் குழந்தையை திருடி சென்ற பெண் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பண்டு பள்ளி கிராமத்தில் உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார், அந்த பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

 a