வறுமையின் காரணமாகவே பிச்சை எடுப்பதால், தடை செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

பிச்சை எடுப்பவர் யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை என்றும் வறுமையின் காரணமாகவே பிச்சை எடுப்பதால், அதை தடை செய்ய முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வறுமையின் காரணமாகவே பிச்சை எடுப்பதால், தடை செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

கொரோனா காலத்தில் டிராபிக் சிக்னல், சந்தைப்பகுதி, பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களை தடை செய்யக்கோரி டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம். ஆர்.ஷா ஆகியோர்,  வறுமையினாலும்,  படிப்பதற்கான வழியில்லாமல்,  வேலையில்லாமல் வாழ்வாதாரத்துக்காக பிச்சை எடுக்கின்றனர் கருத்து  தெரிவித்தனர்

எவரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை என்றும் வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதால், அதை தடை செய்ய முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக  மத்திய அரசும் , டெல்லி அரசும் பதிலளிக்க  நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் , வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.