கருப்பு பூஞ்சை நோயால் நாடு முழுவதும் 28,252 பேர் பாதிப்பு: சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

நாடு முழுவதும் 28 ஆயிரத்து 252 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 

கருப்பு பூஞ்சை நோயால்  நாடு முழுவதும் 28,252 பேர் பாதிப்பு: சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா பெருந்தொற்று குறித்த 28வது மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று டெல்லியில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி , வணிகம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் நித்தியானந் ராய்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் போது மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தான் நாட்டில் கொரோனா பாதிப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதாகவும், இறப்பு விகிதம் 1.20 சதவீதமாகக குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். 

 தமிழ்நாடு,கேரளா, கர்நாடக, மகாராஷ்டிரா உள்ளிட்ட அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் 3ம் அலை ஏற்படுவதை தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை மற்றும் மக்களிடம் தடுப்பூசி மீது உள்ள தயக்கத்தை போக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
.............