விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த்- புதுச்சேரியில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது .....

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு  போராட்டத்திற்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என  அறிவிக்கப்பட்டுள்ளது.  

விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த்- புதுச்சேரியில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது .....

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு  போராட்டம் நடைபெற உள்ளது.

புதுவையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 

அத்துடன் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட முக்கியக்கட்சிகளின் மாநில நிர்வாகிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ டெம்போ ஓட்டுனர்கள் சங்கம், மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு திரட்டினர்.

மேலும்  புதுச்சேரியில் வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட், கடைகள் ஆகியவற்றை மூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாக வியாபாரிகள்  தெரிவித்துள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் பஸ்கள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத  நடவடிக்கைகளை கண்டித்து  போராட்டம் நடத்த உள்ளன.