கைதி வயிற்றில் இருந்து சைனா மொபைல் மீட்பு..திகார் சிறையில் பரபரப்பு.!!

டெல்லி திகார் சிறையில் இருந்த கைதி ஒருவர் சோதனைக்கு வந்த அதிகாரிகளிடன் இருந்து தப்பிக்க, தான் மறைத்து வைத்திருந்த செல்போனை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதி வயிற்றில் இருந்து சைனா மொபைல் மீட்பு..திகார் சிறையில் பரபரப்பு.!!

டெல்லி திகார் சிறையில் உள்ள கைதிகள், சிறையின் உள்ளே கொண்டுவர தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகிப்பதாக சிறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கைதி ஒருவர், அதிகாரிகளிடம் இருந்து மறைப்பதற்காக மொபைல் போனை விழுங்கி வயிற்றில் பதுக்கி வைத்துள்ளார். இதனை அறிந்த போலீசார் கைதியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் கைதியின் வயிற்றில் இருந்த செல்போன் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டு பார்க்கப்பட்ட போது அவை சிறிய அளவிலான சைனா மொபைல் என தெரியவந்துள்ளது.   இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் தெரிவித்த கருத்து  மொபைல் ஃபோனை விழுங்குவது கடினம், அதைச் செய்யும் பழக்கமுள்ளவர்கள் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்றும்
 
பொதுவாக சிறைக் கைதிகள் இதை அதிகாரிகளிடம் இருந்து மறைக்கவே செய்வார்கள். இதைப் பழக்கப்பட்டவர்களால் மட்டுமே விழுங்க முடியும்.  இதைப்போல் 10 வழக்குகள் இதுவரை ஜிபி பான்ட் மருத்துவமனைக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.