கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து ஆராய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து ஆராய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து ஆராய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த இரண்டு தடுப்பூசிகளையும் சேர்த்து 20 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் இந்த தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக அவற்றின் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் போட்டுக் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 4 ஆயிரம் பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், இந்த சோதனை அடுத்த வாரம் தொடங்கும் எனவும் சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவன மூத்த விஞ்ஞானி தருண் பட்நாகர் தெரிவித்துள்ளார்.