பிளிப்கார்ட், அமேசானுக்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு...

பிளிப்கார்ட், அமேசான் போன்ற மின்னணு வர்த்த தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

பிளிப்கார்ட், அமேசானுக்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு...

சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2020ல் மேற்கொண்ட திருத்தகங்கள் தொடர்பாக சில பரிந்துரைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்னணு வர்த்தக தளங்கள் குறிப்பிட்ட பொருட்களை குறிப்பட்ட நேரத்துக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என தனது புதிய பரிந்துரையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற விற்பனைகள் ஆண்டு தோறும் நடைபெறுவதால் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, இத்தகைய திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.