கொரோனா சிகிச்சை மருந்தை சட்டவிரோதமாக பதுக்கிய கம்பீர் அறக்கட்டளை...

கொரோனா தொற்று சிகிச்சைக்கு வழங்கப்படும் ஃபேபிஃப்ளு மருந்தை கவுதம் கம்பீரின் அறக்கட்டளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக மருந்து கட்டுப்பாடு இயக்ககம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சை மருந்தை சட்டவிரோதமாக பதுக்கிய கம்பீர் அறக்கட்டளை...

கொரோனா தொற்றின் தாக்கம் அதிதீவிரமடைந்துள்ள நிலையில், அளவுக்கு அதிகமாக மருந்துகளை பதுக்குவது சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு சொந்தமான அறக்கட்டளையில், கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஃபேபிஃப்ளு மருந்தை அதிகளவில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மருந்து கட்டுப்பாடு இயக்ககம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு குறித்த முழு விவரங்களை 6 வாரங்களுக்குள் அறிக்கையாக சமர்பிக்குமாறு டெல்லி மருந்து கட்டுப்பாடு இயக்ககத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.