அனுமதி பெறாமல் செல்போன் வாங்கியதால் - மனைவியை தீர்த்து கட்ட கூலிப்படையை ஏவிய கணவன்..

செல்போன் வாங்கிய மனைவியை ஆட்களை வைத்து கொலை செய்ய முயன்ற கணவன் கைது செய்யப்பட்டான்.

அனுமதி பெறாமல் செல்போன் வாங்கியதால் - மனைவியை தீர்த்து கட்ட கூலிப்படையை ஏவிய கணவன்..

கொல்க்கத்தாவின் தெற்கு புறநகரில் உள்ள நரேந்திரபூரை சேர்ந்தவர் ராஜெஷ் இவருக்கு வயது 40. இவரது மனைவி டியூஷன் நடத்தி சம்பாதித்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர் தனது கணவரிடம் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்கி தருவதாக கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அதனை அவர் கண்டுகொள்ளாத போக்கில் அவரே தனது டியூசனில் மூலம் வரும் தொகையை சேர்த்து வைத்து கணவரிடம் சொல்லாமல் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அறிந்த ராஜேஷ் ஜா கடும் கோவம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

மனைவியை கொல்வதற்காக திட்டம் போட்டு இதற்காக கூலிப்படை ஒன்றை ஏவியுள்ளார். தனது மனைவி வீட்டை விட்டு வெளியே வரும் நேரம் பார்த்து கூலிப்படையினருடன் சேர்ந்து இவரும் மனைவியை தாக்கியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூலிப்படையினரையும் அவரது கணவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். கூலிப்படையை சேர்ந்த மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர்.