நடப்பாண்டில் எந்தெந்த பொருட்களின் மீதான வரி குறைந்துள்ளது தெரியுமா? இதோ...

நடப்பாண்டில் எந்தெந்த பொருட்களின் மீதான வரி குறைந்துள்ளது தெரியுமா? இதோ...

நடப்பாண்டில் தொலைக்காட்சி, செல்போன் உதிரி பாகங்கள் உள்ளிடவை மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2023-2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் ஜவுளி மற்றும் விவசாயம் தவிர மற்ற பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி விகிதங்களின் எண்ணிக்கையை 23 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : 17 லட்சம் கோடி மோசடி...உரிய விசாரணை நடத்தப்படுமா? பாஜகவை விளாசும் வைகோ!

அதன் விளைவாக, பொம்மைகள், சைக்கிள்கள், ஆட்டோமொபைல்கள் உட்பட சில பொருட்களின் அடிப்படை சுங்க வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் ஏற்படும் என தெரிவித்தார். அதேபோல் தொலைக்காட்சி, கேமரா மற்றும் செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி 2 புள்ளி 5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் அவைகளின் விலை 30 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறினார். 

மேலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக லித்தியம் பேட்டரி மற்றும் கேமரா லென்ஸ்கள் மீதான இறக்குமதி வரி கடந்த ஆண்டை போல் 13 சதவிகிதமாகவே நடப்பாண்டிலும் தொடரும் என தெரிவித்தார். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீவனத்தின் மீதான சுங்க வரியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.