மக்கள் தொகை பெருக்கம் உ.பியின் வளர்ச்சியை தடுக்கிறது- யோகி ஆதித்யநாத்

மக்கள் தொகை பெருக்கத்தால் மாநிலத்தின் மேம்பாட்டு வளர்ச்சி தடைபடும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை பெருக்கம் உ.பியின் வளர்ச்சியை தடுக்கிறது- யோகி ஆதித்யநாத்

 உலக மக்கள் தொகை தினமான இன்று, பிரதமர் மோடி மாநிலம் சார்பில் புதிதாக வகுக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கொள்கையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அனைத்து சமூகத்தினரையும் கருத்தில் கொண்டே இந்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மக்கள்தொகை வளர்ச்சியை 2 புள்ளி 1 சதவீதமாக கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன்மூலம் இரு குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட குழந்தையை பெற்றெடுப்போருக்கு உள்ளூர் தேர்தலில் பங்கேற்க வாய்ப்பில்லை எனவும், அரசு வேலை கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.