கொட்டும் பனியிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் - குடியரசு தின விழா!!

நாட்டின் 73 வது குடியரசு தின விழாவை கொட்டும் பனியிலும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

கொட்டும் பனியிலும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் - குடியரசு தின விழா!!

நாட்டின் 73 வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அதே போன்று பிற மாநிலங்களின் ஆளுநர்கள் அந்தந்த மாநிலத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்தோ திபெத்திய எல்லைக் காவல் துறையினர் கடும் குளிரிலும் தேசியக் கொடியினை ஏற்றியவாறு குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அவர்கள் லடாக் எல்லையில் 15 ஆயிரம் அடி உயரம் மற்றும் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடியுள்ளனர்.

இதே போல உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாண் பகுதியில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்திற்கு தேசியக் கொடியுடன் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு உள்ளது.  மேலும் இமாச்சலபிரதேசத்தில் 16 அடி உயரத்தில் தேசியக்கொடியுடன் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.