என்னது மீன் நடக்குமா!! 22 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட அரிய வகையிலான நடக்கும் மீன்!!

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் பிங்க் நிறத்தில் நடக்கும் மீன் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்

என்னது மீன் நடக்குமா!! 22 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட அரிய வகையிலான நடக்கும் மீன்!!

டாஸ்மானியா தீவின் கடற்கரை பகுதியில் மிக அரிய வகையான நடக்கும் மீன் 22 வருடத்திற்கு பின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவனம் அழிந்து வரும் மீன் இனத்தை கண்டதாக  தெரிவித்தனர்.இந்த வகையான பிங்க் நிற மீன் முதல் முறையாக 1999 ஆம் ஆண்டு காலத்தின் போது அறியப்பட்டதாகவும், ஒரு காலத்தில் இவை அதிகமாக இருந்ததாகவும், பிற்காலத்தின் போது இவை டெர்வெண்ட் கடற்கரை முகத்துவாரங்காளில் மட்டும் தென்படும் அளவிற்கு அதன் இனம் தற்போது குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் போது சுற்றுசூழல் பாதுகாபு மற்றும் பல்லுயிர் சட்டத்தின் கீழ் இந்த மீன் இனம் ஆபத்தான நிலையில் அழிந்து வரும் பட்டியலில் இந்த மீன் இனத்தினை சேர்த்துள்ளனர்.அதன்பின்னர் பாதுகாப்பு முயற்சிகளால் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வகையான மீன்கள் மீண்டும் கடற்கரை பகுதிகளில் தென்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை ஆராய்ச்சியாளர்கள் கடல் பூங்காவின் நீருக்குள் கேமராவை வைத்து இந்த அரிய வகை இருந்ததை கண்டறிந்துள்ளனர்.இந்த வகையான மீன் இனம் உயிரியலில் ஆங்கலர்பிஷ் குடும்பத்தை சேர்ந்ததாகவும் இதனின் பெயர்காண காரணமாக அதன் உடலின் உள்ள சிறிய கை போன்ற அமைப்புகள் இருப்பதை சொல்கின்றனர்.மேலும் அதன் கைகளை கொண்டு கடல் படுக்கையில் நடக்க இது பயன்படுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.