இனி இந்தியில் மட்டும் தான் பேச வேண்டும்: அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் சுற்றறிக்கையால் பரபரப்பு...

டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்ப்பலையை கிளப்பியுள்ளது. 

இனி  இந்தியில் மட்டும் தான் பேச வேண்டும்: அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் சுற்றறிக்கையால் பரபரப்பு...

கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, டெல்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். இங்கு பணிபுரியும் செவிலியர்களுக்கு, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.  

அதில் செவிலியர்கள் மலையாள மொழியில் பேசுவதால் நோயாளிகள் மொழி புரியாமல் இன்னல்களை சந்தித்து வருவதாகவும்,   எனவே செவிலியர்கள் அனைவரும் அலுவலக வழக்கு மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனை கடைபிடிக்காதபட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், தங்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே மலையாள மொழியை பயன்படுத்துவதாகவும், நோயாளிகளுடன் அவர்களுக்கு புரியும் மொழிகளில் மட்டுமே பேசுவதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் மற்ற இந்திய மொழிகளை போல மலையாள மொழியும் இந்திய மொழி தான் என பதிவிட்டுள்ளார்.