அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள்... கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியடித்த போலீசார்..!

இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டை வீசி போலீசார் விரட்டியடித்தனர்.

அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள்... கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியடித்த போலீசார்..!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி மக்கள் 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை சூழ்ந்து கொண்ட மாணவர்கள், தடுப்புகளை மீறி சென்று அதிபர் பதவியை விலக வலியுறுத்தினர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் பெரும் பதற்றம் நிலவியது.  இதனிடையே நேற்று தொலைக்காட்சி வாயிலாக மக்களுடன் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு 15 குழுக்களை ஏற்படுத்த உள்ளதாகவும், ஒவ்வொரு குழுவிலும் 4 இளைஞர்களை உறுப்பினர்களாக இணைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.