ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்த திட்டம்? அடுத்த வாரம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பிரதமர் முடிவு...

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீரில்  விரைவில் தேர்தல் நடத்த திட்டம்?  அடுத்த வாரம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பிரதமர் முடிவு...

கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அவை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. மேலும் ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் அதற்கான மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.

இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அடுத்த வாரம், டெல்லியில் வைத்து  பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களையும் கூட்டி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், சிறப்பு அந்தஸ்துக்கு பின் கூடும் இந்த முதல் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசின் இந்த செயல்பாட்டை, காங்கிரஸ் வரவேற்றுள்ளது.