இந்தியாவுடன் வர்த்தகத்தை துண்டித்துக் கொண்ட தலிபான்கள்...

இந்தியாவுடனான வர்த்தகத்தை தலிபான்கள் துண்டித்துக் கொண்டதால், உலர் பழங்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இந்தியாவுடன் வர்த்தகத்தை துண்டித்துக் கொண்ட தலிபான்கள்...

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு  பாதாம், பிஸ்தா, அத்தி  உள்ளிட்ட உலர் பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் 85 சதவீத உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள், பாகிஸ்தான் வழியாக நடைபெற்று வந்த இந்திய வர்த்தகத்திற்கு தடை விதித்துள்ளனர். இதையடுத்து தற்போது சர்வதேச வடக்கு தெற்கு பொருளாதார தாழ்வாரம் மற்றும் துபாய் வழியாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தாலிபான்களின் இந்த தடையால் டெல்லியில் உலர் பழங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை உலர் பழங்களின் விலை உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் ஆப்கானிஸ்தானின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா விளங்குவதை சுட்டிக்காட்டிய வணிகர்கள் இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்கு, சர்க்கரை, மருந்துகள், ஆடைகள், டீ, காபி, தகவல் தொடர்பு கோபுரங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தனர். எனவே விரைவில் இந்தியாவுடனான வர்த்தகத் தடை விலக்கப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.