அடிக்கடி அபராதம் கேக்குராங்க... மன உளைச்சலால் பைக்கை எரித்த வியாபாரி...!

தெலுங்கானாவில் தொடர் அபராதாம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான வியாபாரி, தன்னுடைய இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிக்கடி அபராதம் கேக்குராங்க... மன உளைச்சலால் பைக்கை எரித்த வியாபாரி...!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தை சேர்ந்தவர் மக்பூல். அடிலாபாத்தில் வியாபாரம் செய்து வரும் மக்பூல் இன்று மதியம்  அடிலாபாத்தில் உள்ள பஞ்சாப்சவுக் சாலை சந்திப்பில், போக்குவரத்து போலீசார் கண்முன்னே நடுரோட்டில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து எரித்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த போலீசார், பொதுமக்கள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதன்பின்னர் இது குறித்து மக்பூலிடம் விசாரித்தனர். அதில் கடந்த சில நாட்களுக்கு முன் நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்திய போலீசார், எனக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

அதனை தான் செலுத்திவிட்டதாக கூறிய அவர், இன்று மீண்டும் தன்னை வழிமறித்து தடுத்து நிறுத்திய போலீசார், மேலும் 2000 ரூபாய் அபராதம் கேட்டதாகவும், அந்த சமயம் தான் வியாபார விஷயமாக சென்று கொண்டிருந்ததேன், ஆகையால் பின்னர் அபராதத்தை செலுத்துக்கிறேன் என கூறியதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் அவரை விடாத போலீசார், அபராத்தை செலுத்திவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியதாக கூறினார். மேலும் ஏதேதோ காரணங்களை கூறி போலீசார் தன்னை தொடர்ந்து இதுபோல் அபராதம் செலுத்த சொன்னதாகவும் கூறினார்

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தான், இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக தான் தான் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக தெரிவித்தார்.