வேறு பெண்ணுடன் தொடர்ப்பில் இருந்த கணவனின் தலையை துண்டித்து காவல்நிலையம் எடுத்து சென்ற மனைவி.!!

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவனின் தலையை, மனைவியே துண்டித்து காவல்நிலையம் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேறு பெண்ணுடன் தொடர்ப்பில் இருந்த கணவனின் தலையை துண்டித்து காவல்நிலையம் எடுத்து சென்ற மனைவி.!!

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்தவர் ரவிசந்த்சூரி-வசுந்தரா தம்பதி, இவர்களுக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தம்பதிக்கு மனநிலை சரியில்லாத மகன் ஒருவர் இருக்கிறார். இதற்கிடையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பதையறிந்த மனைவி வசுந்தரா, கணவரை கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கணவனின் கள்ள தொடர்பு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தான் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாத மனநிலைக்கு சென்ற வசுந்தரா கணவனை பலமாக தாக்கி கத்தியால் அவருடைய கழுத்தில் வெட்டி கொலை செய்தார். பின்னர் கணவனின் தலையை கையில் எடுத்து பையில் போட்டு கொண்டு ரேணிகுண்டா காவல் நிலையத்திற்கு நடந்து சென்று சரணடைந்தார்.

கணவன் தலையுடன் மனைவி நடந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வசுந்தராவிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது கள்ளத்தொடர்பு காரணமாக கணவனை கொலை செய்தேன் என்று அவர் கூறினார். அதனைதொடர்ந்து வசுந்தரா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.