இராணுவ வீரர்கள் வெப்பத்திலும் குளிரிலும் தாய் நாட்டை காத்து வருவதாக பெருமிதம் கொள்ளும் - ஜனாதிபதி!!

குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார்.

இராணுவ வீரர்கள் வெப்பத்திலும் குளிரிலும் தாய் நாட்டை காத்து வருவதாக பெருமிதம் கொள்ளும் - ஜனாதிபதி!!

நாட்டில் குடியரசு தினவிழா  வருகிற 26 ஆம் தேதி கொண்டாடபடவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் உரையாற்றி உள்ளார்.

இந்த உரையில் அவர் மக்களிடம் கூறியிருப்பதாவது:

நம் நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் அனைத்து இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். விடுதலைக்காக போராடிய கதாநாயர்களை நினைவு கூறும் வகையில் குடியரசு தினம் விளங்கி வருகிறது

நமது ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் படையினரும் தேசப் பெருமிதத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.இமயமலையின் தாங்க முடியாத குளிரிலும் பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்து தாய்நாட்டை காத்து வருகின்றனர். கடந்த ஆண்டு, நமது விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக்கில் தங்கள் முத்திரையைப் பதித்தனர்.இந்த இளம் சாம்பியன்களின் தன்னம்பிக்கை இன்று கோடிக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. 

கொரோனா பேரிடரில் இருந்து ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியது ஆறுதலாக உள்ளது. ஸ்டார்ட் அப் சூழலை மிகத் திறமையாக பயன்படுத்தி, நமது இளம் சுய தொழில் முனைவோர் முத்திரையை பதித்துள்ளனர் . உலகில் புதுமையான பொருளாதாரத்தைக் கொண்ட 50 நாடுகளில் இந்தியாவும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 

நவீன ராணுவ திறன்கள் மூலம் உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியாவும் மாறியுள்ளது.