மாற்றான் படபாணியில் ஒட்டி பிறந்த இரட்டையர்களுக்கு கிடைத்த அரசு வேலை!!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மின் அலுவலகத்தில் வேலை கொடுத்து உதவிய பஞ்சாப் மாநில அரசுக்கு சகோதரர்கள் இருவரும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மாற்றான் படபாணியில் ஒட்டி பிறந்த இரட்டையர்களுக்கு கிடைத்த அரசு வேலை!!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மின் அலுவலகத்தில் பஞ்சாப் மாநில அரசு வேலை கொடுத்து உதவியுள்ளது. வேலை கொடுத்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அந்த இரட்டை சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த மாற்றான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக எதிரெதிர் திசையில் செயல்படுவதுபோல் நடித்திருப்பார். ஆனால், உண்மையில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் குணாதியங்கள் ஒன்றாகவே இருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்து. 

அந்த படக்கதையில் வருவதைபோன்றே,  புது டெல்லியில் சோஹ்னா மோகனா என்ற இருவரும் பிறக்கும்போதே ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக பிறந்தனர். இதனால் சோஹ்னாவும் மோகனாவும் பெற்றோரால் கைவிடப்பட்டு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் விளைவாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கருதியதால் அவர்களைப் பிரிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில்,டெல்லியில் சோஹ்னா மற்றும் மோகனா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடுமையான கஸ்டத்திலும் இன்று உலகிற்கு தெரியவந்துள்ளனர். அதற்கு காரணம் இரட்டையர்களாகிய அவர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு வழங்கிய வேலை தான்.  

பஞ்சாப்பில், சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் அரசு வேலை கொடுத்து உதவியுள்ளது.

இந்நிலையில், இந்த வாய்ப்பை வழங்கிய பஞ்சாப் அரசுக்கு சகோதரர்கள் இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இந்த வேலை கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வேலையில் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் சேர்ந்தோம். மேலும், வாய்ப்பளித்த பஞ்சாப் அரசு மற்றும் எங்களைப் பயிற்றுவித்த பிங்கல்வாரா நிறுவனத்திற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, 19 வயதான சோஹ்னாவுக்கு இந்த வேலை கிடைத்ததால் இது குறித்து பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் துணை மின்நிலைய இளைய பொறியாளர் ரவிந்தர் குமார், “சோஹ்னாவுக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளது. மோகனா சோஹ்னாவுக்கு மின்சார உபகரணங்களை கவனிப்பதில் உதவுகிறார்கள். இந்த வேலையில் சோஹ்னாவுக்கு நல்ல அனுபவம் உண்டு. அதனால்தான் அவருக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.