நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சமையல் எரிவாயு உருளை கிடைப்பதிலும் பெரும் சிக்கல்...

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சமையல்  எரிவாயு உருளை கிடைப்பதிலும் பெரும் சிக்கல்...

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால்  சமையல்  எரிவாயு உருளை கிடைப்பதிலும் பெரும் சிக்கல்   ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.ஊரடங்கு காலத்திலும்  முக்கியமான தேவை சமையல் எரிவாயு ஆகும். சென்ற ஆண்டின் தொடக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது   சமையல் சிலிண்டர் விநியோகம் தங்கு தடையில்லாமல் நடைபெற்று வந்தது.

சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியில் இருப்பவர்கள் கொரோனா அச்சத்தையும் தாண்டி விநியோகப் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இந்த முறை கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. உயிரிழப்புகளும் சென்ற ஆண்டை விட மிக அதிகமாக உள்ளன. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகும் கூட வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிலிண்டர் டெலிவரி பணியாளர்களும் தற்போது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 50, ஆயிரம் சிலிண்டர் பணியாளர்கள் கொரோனா தொற்றால் அவதியுறுவதாக சமையல் எரிவாயு விநியோகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டில் ஊரடங்கு காலத்திலும் சிறப்பாகச் செயல்பட்ட சிலிண்டர் விநியோகப் பணியாளர்கள் கொரோனா போராளிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை அந்தப் போராளிகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இதனால் சிலிண்டர் விநியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், பொதுமக் களுக் கான சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. சிலிண்டர் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று சமையல் எரிவாயு விநியோகக் கூட்டமைப்பு சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் பணியாளர்கள் தினமும் 75 லட்சம் வீடுகளுக்குச் சென்று  சுமார் 3 கோடி மக்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது..