பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாத அரிய நாள் இன்று: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்காந்தி...

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு நாள் அதிகரிக்காவிட்டால் அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பது தான் மோடி அரசின் வளர்ச்சி  என்று  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாத அரிய நாள் இன்று: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்காந்தி...

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

பல்வேறு  மாநிலங்களில் பெட்ரோல் விலை 100  ரூபாயை தாண்டியுள்ள நிலையில்  தமிழகத்தில் லிட்டர் ஒன்று 98  ரூபாய்க்கு  விறகப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி  தனது ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாத அரிய நாள் இன்று. என குறிப்பிட்டுள்ளார். 

விலைகள் தினமும் அதிகரிக்கப்படுகின்றன என்பதை இது காட்டுவதாக கூறியுள்ள ராகுல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு நாள் அதிகரிக்காவிட்டால் அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பது தான் மோடி அரசின் வளர்ச்சி என்று ராகுல்  விமர்சித்துள்ளார்.

https://twitter.com/RahulGandhi/status/1405781002786512904